தண்ணீரின்றி வறண்ட விராகசமுத்திரம் கண்மாய்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகில் பிளவக்கல் என்ற இடத்தில் பெரியார் கோவிலாறு அணைகள் உள்ளன. இந்த அணைகளுக்கு 40 கண்மாய்கள் பாத்தியப்பட்டவை ஆகும். பாத்தியப்பட்ட கண்மாய்களில் வத்திராயிருப்பு விராகசமுத்திரம் கண்மாய் ஒன்றாகும். விராகசமுத்திரம் கண்மாய் 430.15 ஏக்கா் பாசன வசதி உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பெய்ததால் அணைகளில் உள்ள தண்ணீர் இந்த கண்மாய்க்கு வந்தது. அதன்பிறகு தொடா்ந்து மழை பெய்ததால் கடந்த மாதம் வரை ஓரளவு தண்ணீர் இருந்தது.கடந்த ஓராண்டாக மழை ஓரளவு பெய்ததால் இந்த கண்மாய் தண்ணீரை வைத்து நெல் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் செய்து வந்தனா். தற்போது மழை காலம் தாமதம் ஆகி வருவதால் இந்த கண்மாயில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. மழை பெய்திருந்தால் அணைகளில் இருந்து வரக்கூடிய தண்ணீரை வைத்து விவசாயம் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும். காலதாமதம் ஆவதால் தண்ணீர் இல்லாத நிலை காணப்படுகிறது. மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனா்….

Related posts

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு

திமுக ஆட்சியில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டது: துணை முதலமைச்சர்

ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்