தட்கல் சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெறலாம்

அவிநாசி, ஆக.18: தட்கல் சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்புபெற விவசாயிகள் அந்தந்த பகுதி மின்வாரியத்தை அனுகலாம் என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து மின் வாரியத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஆணையின்படி, விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், ஏற்கனவே தட்கல் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், மற்றும் தற்பொழுது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில், விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. ஆகவே இத்திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற, அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளரை அனுகி பயன்பெறலாம். என தெரிவித்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை