தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ பறிமுதல்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 23: திருத்துறைப்பூண்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆணையின் படி, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் பிரபாகரன் வழிகாட்டுதலின்படி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில், நகரா ட்சி எல்லைக்குட்பட்ட கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி வீசி எரியக்கூடிய பிளாஸ்டிக் (நெகிழி) பைகள் மற்றும் டீ கப்புகள் போன்ற வை சுமார் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1900 அபராதம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மீண்டும் பயன்படுத்தாதவாறு சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு இறுதியாக்கம் செய்வதற்கு சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்க ஆர்ஆர்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு