தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் பேருந்து மீது பைக் மோதி கல்லூரி மாணவன் பலி: நண்பன் கவலைக்கிடம்

சென்னை: பாடி மதியழகன் நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (22). வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா பரவலை தடுக்க சென்னையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் தடை விதித்து இருந்த நிலையில், முகமது இப்ராஹிம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தடையை மீறி புத்தாண்டு கொண்டாட அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் கவுதமுடன் (24) பைக்கில் வெளியில் சென்றார். பாடியில் இருந்து திருமங்கலம் 13வது மெயின் ரோடு வழியாக சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது  பைக் மோதியது. இதில், முகமது இப்ராஹிம் சம்பவ இடத்திலேேய துடிதுடித்து பலியானார். பின்னால் அமர்ந்து வந்த கவுதம் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், முகமது இப்ராஹிம் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு