தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த பக்கவிளைவும் இல்லை: முழு ஊரடங்கு குறித்து இப்போது கூற முடியாது..! சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த பக்கவிளைவும் ஏற்பட்டதாக தகவல் வரவில்லை. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் கூறினார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது. அது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு முக கவசம் அணிந்து அரசு விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்று அவர் கூறியுள்ளார். மீண்டும் ஊரடங்கு போடப்பட்டால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.நடிகர் விவேக் நம்பிக்கைதடுப்பூசிகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நடிகர்களும் நடிகைகளும் அரசியல் தலைவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில், இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி பற்றிய வதந்திகள் அதிகமாக பரவி வருகிறது. தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை மக்களுக்கு உணர்த்தவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். தமிழ்நாட்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். மாஸ்க் போடுவது, கைகளை சுத்தப்படுவதோடு மட்டும் இல்லாமல் மருத்துவ ரீதியான பாதுகாப்பையும் மக்கள் மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்