தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் இல்லை பொதுமக்கள் அனைவரும் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக் பேட்டி

சென்னை: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று நடிகர் விவேக் கூறினார். கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விவேக் சென்னை, ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் ரமேஷ், ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை  ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடிகர் விவேக் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களுக்கு சமூக பாதுகாப்பு என்பது முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளி ஆகியவை தான். ஆனால் மருத்துவ ரீதியாக பாதுகாப்பு என்பது தடுப்பூசி மட்டும் தான், மேலும் சில பேர் சித்த, ஆயுர்வேத மருந்துகள்,  விட்டமின், ஜிங்க் மாத்திரை சாப்பிடுகிறார்கள். இது எல்லாம் கூடுதல் பாதுகாப்பு. தடுப்பூசி போடுவதால் கொரோனா தொற்று மீண்டும் வராதா, என்றால் அப்படி இல்லை வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. 2வது டோஸ் போட்டுக் கொண்டால் அதன்பிறகு இரண்டு வாரம் கழித்து தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுவரை பாதுகாப்பு இல்லாமல்  இருந்திட்டு தடுப்பூசி மேல் பழிபோடாக் கூடாது.  தடுப்பூசி போட்டுக் கொண்டால் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் தான் இருக்க வேண்டும். எனவே ேகாவேக்சின், கோவிஷீல்டு இரண்டில் ஒன்றை சீக்கிரமாக போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் இதுவரை வரவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியாதவது: நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சமூக கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் விவேக் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். …

Related posts

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை: மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்