தடுப்பூசி செலுத்தாத 7,762 பேருக்கு மின்சார ரயிலில் அனுமதி மறுப்பு

சென்னை: சென்னையில் மின்சார ரயில்களில் கடந்த 10ம்தேதி முதல் 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதையடுத்து 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே கவுன்டர்களில் டிக்கெட் வழங்கப்பட்டது. மேலும் சீசன் டிக்கெட்களில் சான்றிதழ்களின் எண்களும் அச்சிடப்பட்டன. அதன்படி, தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் 2 தவணை தடுப்பூசி போடாத 7 ஆயிரத்து 762 பேரை மின்சார ரயிலில் பயணிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 2 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.52,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்