தடாகம் பகுதியில் தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

 

கோவை, பிப்.3: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் குட்டியுடன் கூடிய யானை கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. இந்த யானை கூட்டம் அப்பகுதியில் உள்ள தெருக்களில் உலா வந்தது. நஞ்சுண்டாபுரம் பெருமாள் கோயில் அருகே யானைகள் கூட்டம் அணிவகுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், வரப்பாளையம் வாத்தியார் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த கதவை உடைத்து சேதப்படுத்தியது.

யானைகள் கூட்டம் தொடர்ந்து நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ஆனந்த் உள்பட 4 பேரின் தோட்டங்களில் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தோட்டங்களில் இருந்த 200 வாழை, 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்தும், தூக்கி வீசியும் சென்றுள்ளது. தவிர, சொட்டுநீர் பாசனம் மற்றும் பயிர்களுக்கு தண்ணீர் போகும் பைப்புகள் அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளன. இதனால், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானை கூட்டம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனத்திற்கு விரட்டினர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’