தடகள போட்டிகள் தொடக்கம்

 

சிவகங்கை, அக்.11: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான குடியரசுதின தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு எஸ்பி அரவிந்த் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஆஷாஅஜித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 8 குறுவட்டத்தைச் சேர்ந்த 650க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

குழு விளையாட்டுகளான புதிய 12வி ளையாட்டு போட்டிகள், 12 பழைய விளையாட்டு போட்டிகள் மற்றும் 14 வயது, 17வயது மற்றும் 19வயது ஆகிய பிரிவுகளில் மாணவ,மாணவிகள் பங்கு பெறுகின்றனர். வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெறுவர். தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், சிவகங்கை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை