தஞ்சை வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

 

தஞ்சாவூர், ஜூலை 13: சாலியமங்கலம் அடுத்து சூலியகோட்டை அருகே உள்ள பொட்டாங்காடு பகுதியில் தஞ்சை வனத்துறை சார்பில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தை அடுத்த கம்பர்நத்தம் ஊராட்சி பொட்டாங்காடு பகுதியில் சுமார் 8.55 ஏக்டர் பரப்பளவில் தஞ்சாவூர் வனத்துறை மற்றும் பாரத் பெட்ரோலியம் இணைந்து 5000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஸ்வச்சதா பக்வாடா திட்டத்தின் கீழ் நூலை ஒன்று முதல் 15ம் தேதி மரணங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அந்தப் பகுதியில் உள்ள மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் மரங்கள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமையேற்று மரகன்றுகளை நட்டுவைத்தார். இதில் இலுப்பை, நாவல், புங்கன், புளி, வாகை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பொட்டாங்காடு பகுதி மக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை வனச்சரக அலுவலர் ரஞ்சித், வன அலுவலர் ரவி, அருண் சுப்ரமணியன், விகாஷ் குமார், பாரதி ராஜா, ஷாஜி மான், முத்துவேல், சிற்றன்ஸ் விபுள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது