தஞ்சை பெரியகோயில் சுவரில் ஆணி அடித்த சம்பவம் இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயில் சுவரில் ஆணி அடித்ததற்கு இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வுபெற்ற பொன். மாணிக்கவேல் நேற்று தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச சிலை கடத்தல் கும்பல் தலைவர் சுபாஷ்சந்திரகபூர் கடந்த 2011ம் ஆண்டு ஜெர்மனியில், எங்களது குழுவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நியூயார்க் நீதிமன்றத்தில் ஏராளமான வாரண்ட் பெற்று 1,411 பழமையான, கல் மற்றும் தெய்வ செப்புசிலைகள், கலாசார பொருட்களை கைப்பற்றினோம். இவற்றை இந்திய வெளியுறவுத்துறை அலுவலகத்தில் அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது. அதில் 50 சிலைகள் தமிழக கோயில்களுக்கு சொந்தமானவை. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சாவூர் பெரிய கோயில் சுவரில் ஆணி அடித்ததற்கு இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொன்.மாணிக்கவேல் கூறினார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு