தஞ்சை களிமேடு தேர்திருவிழா குறித்து அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

சென்னை: அரசுக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் தஞ்சை தேர் திருவிழா நடைபெற்றுள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் நேற்று 94வது அப்பர் குருபூஜையை முன்னிட்டு நேற்று இரவு சப்பரம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.அப்போது பொது மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியது. இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் தஞ்சை தேர் திருவிழாவை ஊர் மக்கள் நடத்தியுள்ளனர். சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர், களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்திருவிழாவும் அல்ல, அது தேரும் அல்ல, அது சப்பரம். திருவிழாவை ஊர் கிராம மக்களே ஒன்றுகூடி நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி