தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

தஞ்சை: குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 24ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணி அளவில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 24ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நாளை கல்லணையை வந்தடையும் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அணை திறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தஞ்சை நீர்வளத்துறை அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது…

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் பணிக்கு நாளை நேர்காணல்

வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்க ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பு முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்