தஞ்சை உள்பட 4 ரயில்கள் ரத்து

சென்னை: போதிய வரவேற்பு இல்லாததால் சென்னையில் இருந்து தஞ்சை ெசல்லும் ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிடப்பட்ட அறிக்கை: போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் (06865, 06866) இடையே தினம் தோறும்  இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில் வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருச்சிராப்பள்ளி – ராமேஸ்வரம் (06849, 06850), நாகர்கோவில் – கோவை (02667, 02668), லோக்மான்யா திலக் டெர்மினஸ் – கொச்சுவெலி (06163, 06164) ஆகிய சிறப்பு ரயில்களும் வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை