தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டை கிராமத்தில் கிடா வெட்டு திருவிழா: உறவினர்கள், நண்பர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை கிராமத்தில் வீட்டுக்கு வீடு கிடா வெட்டி 35 ஆண்டுகளாக தள்ளிப்போன திருவிழா, நடப்பாண்டு விவசாயம் செழித்ததால் 400 குடும்பத்திலும் வெகுவிமரிசையாக நடைபெற்ற அசைவ விருந்தால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சையை அடுத்துள்ள வண்ணாரப்பேட்டை கிராமத்தில் கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது. வீட்டுக்கு வீடு கிடா வெட்டி உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்தளித்து கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கிராமத்தில் உள்ள 400 வீடுகளிலும் கிடா வெட்டு விருந்து நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை மாரியம்மனுக்கும், அய்யனார் கருப்பசுவாமிக்கும் கிடா வெட்டி, வீட்டுக்கு வீடு அசைவ விருந்து வைத்து, திருவிழா நன்றாக நடத்தப்பட்டதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். வீட்டுக்கு வீடு கறிக்குழம்பு, கறிவறுவல், குடல் வறுவல், முட்டை, சிக்கன் என அசைவ விருந்தால் வண்ணாரப்பேட்டை கிராமமே கமகமத்தது. விருந்துக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் உறவினர்கள், நண்பர்கள் வந்ததால் கிராமத்தில் போக்குவரத்து ஸதம்பித்தது. மதுரை வீரன் கருப்பசுவாமி, அய்யனார் ஆகிய சுவாமிகளின் வீதி உலா நடைபெற்றது. வருமானம் இல்லாத காரணத்தால் 35 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டு வந்த இந்த திருவிழா நடப்பாண்டு விவசாயம் செழித்து 400 குடும்பத்தாரும் விருந்து வைக்க விரும்பியதால் திருவிழாவை சிறப்பாக நடத்த முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோயில் விழா குழுவினர் நடப்பாண்டு திருவிழாவை விமர்சையாக நடத்த முடிவு செய்ததை அடுத்து கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. சுவாமிகளின் வீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் இன்று நடைபெற உள்ளது.        …

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்