தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு; 650 காளைகளுடன், 350 வீரர்கள் மல்லுக்கட்டு.!

தஞ்சை: தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு இன்று (29ம் தேதி) நடைபெற்றது. இதில் பங்கேற்க திருக்கானூர்பட்டியை சேர்ந்த 52 மாடுகள் மற்றும் தஞ்சை, சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 650 காளைகள் பங்கேற்றன. 350 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மாடுகளின் உரிமையாளர் மற்றும் மாடு பிடி வீரர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் போட்டதற்கான சான்றிதழ்களுடன் வந்தனர். முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். காலை 7 மணிக்கு மாதா கோவில் தெருவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் களத்தில் நின்று மிரட்டியது.  காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நாமக்கல்இதேபோல் நாமக்கல் பொட்டிரெட்டிப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 700 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். …

Related posts

திருத்தணியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!