தஞ்சையில் 450 கலைஞர்கள் பங்கேற்கும் தேசிய நாட்டுப்புறக் கலை விழா துவங்கியது

தஞ்சை: தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் 450 கலைஞர்கள் பங்கேற்கும் தேசிய நாட்டுப்புறக் கலை விழா கோலாகலமாக தொடங்கியதுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜப்பான், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 குழுக்கள் பங்கேற்றுள்ளார்கள். முதல் நாளில் கேரளாவின் சிங்காரி மேளம் நடனத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தமிழ்நாடு கலைஞர்கள் பங்கேற்ற கரகாட்டம், காவடி ஆட்டமும் நடைபெற்றது. இதே போன்று ராஜஸ்தானின் ஜாக்கிரி நடனம், மராட்டியத்தின் லாவணி ஆட்டம், காஷ்மீரின் சுர்மா நடனம், மத்தியப்பிரதேசத்தின் பதாய், குஜராத்தின் டங்கி, பஞ்சாபின் டங்காரா நடனங்களுடன் பார்வையாளர்களை கவர்ந்தது. ஒவ்வொரு நாளும் 11 குழுவினர் பங்கேற்று, தங்களது திறமைகளை எழிபடுத்தும் விதமாக கலைவிழா நடத்தப்படுகிறது.     …

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்