தஞ்சையில் ஸ்டேடியத்தின் நுழைவு வாயில் கேட் சரிந்து கராத்தே பயிற்சி மாணவன் மீது விழுந்தது; படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள அன்னை சத்யா ஸ்டேடியத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு 10 நாட்களே ஆன நுழைவு வாயிலில் 15 அடி உயரம் கேட் சரிந்து கராத்தே பயிற்சி மாணவன் மீது விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்து படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். தஞ்சையில் உள்ள அன்னை சத்யா ஸ்டேடியத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல்குளம், கால்பந்து மைதானம், ஓட்டப்பந்தயம் டிராக், இரவு நேரத்தை பகலாக்கும் வகையிலான மின்விளக்குகள், 50 அடி உயரத்தினால் ஆன நுழைவு வாயில் வளைவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில் நுழைவு வாயிலுக்கு 15 அடி உயரத்தில் இரண்டு இரும்பு கேட்டுகள் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் கராத்தே பெடரசன் கிளப் சார்பில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று  துவங்கி இரண்டு நாட்கள் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி ஸ்டேடியம் உள் விளையாட்டு அரங்கில் நடைப பெற்று வந்தது. இந்த பயிற்சியில் தளியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீவர்சன் என்ற மாணவன் ஈடுபட்டு வந்தான். தான் மிக சிறந்த கராத்தே வீரனாக வேண்டும் என்கிற லட்சியத்தில் பயிற்சியில் தன்னை தயார படுத்தி வந்தான்.நேற்று  இரவு பரிசுப்பொருட்களை எடுத்து கொண்டு ஸ்டேடியம் வந்தான். அப்போது நுழைவு வாயில் இரும்பு கேட் சாத்தப்பட்டு இருந்ததால், கேட்டை ஸ்ரீவர்சன் தள்ளியபோது எதிர்பாரதவிதமாக கேட் சரிந்து மாணவன் மீது விழுந்தது. இதில் மாணவனின் இடுப்பு எலும்பு முறிந்தது. படுகாயத்துடன் கேட் அடியில் சிக்கி இருந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்கு சேர்த்தனர். எழுந்து நடக்க முடியாத நிலையில், இடுப்பு மற்றும் தொடை எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். தரமற்ற முறையில் பொருத்தப்பட்ட கேட்டால் சிறந்த கராத்தே வீரராக வேண்டும் என்ற மாணவனின் கனவு தகர்க்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனின் அறுவை சிகிசசைக்கான செலவை அரசு ஏற்கவேண்டும் என மாணவனின் பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர்….

Related posts

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு