தஞ்சையில் மின்டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு

தஞ்சை: தஞ்சை மணிமண்டபம் அருகே மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பின்புற நுழைவாயில் கேட் பகுதியில் உயர் மின் கோபுரம் உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ஒருவர், மின் கோபுரத்தில் வேகமாக ஏறினார். பின்னர் தான் வைத்திருந்த கயிற்றை எடுத்து கோபுரத்தின் ஒருபுற கம்பியில் கட்டினார். தொடர்ந்து அந்த கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.  இதை பார்த்த அப்பகுதியினர் தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த கோபுரத்தில் ஏறி அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் காமராஜர் நகரை சேர்ந்த அருள்(46) என்பதும், புதுக்கோட்டை மாவட்டம் கல்விராயன் விடுதியில் உள்ள அவருக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை உறவினர் ஒருவர் உரிமை கொண்டாடுவதாகவும், இதுதொடர்பாக புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு அளித்ததால் சிலர் வீடு புகுந்து தாக்கியதாகவும், இதுகுறித்து திருவோணம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே வரவழைத்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். …

Related posts

குண்டும் குழியுமான சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடிதம்

காந்தியடிகளின் 156வது பிறந்த நாள் கவர்னர், முதல்வர் மலர்தூவி மரியாதை

தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்