தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கிகிடக்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம்

தஞ்சாவூர், மே 16: தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அவற்றை சரி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 5000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவக் கல்லூரி சிகிச்சைக்காக வருவது வழக்கம். இங்கு இதய சிகிச்சை, குழந்தைகள் நலம், பொது மருத்துவம், சிறுநீரகவியல், கண் மருத்துவம், பல் மருத்துவம், புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட 33 பிரிவுகள் இயங்கி வருகின்றன. 5,000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 2,000 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளின் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. அந்தப் பகுதியை கடக்கும் போது துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு இடையே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கழிவு நீரை அப்புறப்படுத்தி கடைக்காரர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி