தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரி கூட்டரங்கில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர், ஜூன் 27: தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பைத் கொடுங்கள். உறவினர்களை போதையில் இருந்து மீட்க உதவுங்கள் என போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரி கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இணைந்து சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் விபரம் வருமாறு: போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்.

மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்போன். அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன என உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்,

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் ரோஸி , வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா,மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் முனைவர் உஷா நந்தினி, உதவி ஆணையர் ரவிச்சந்திரன் அவர்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியை மீனாட்சி, மருத்துவர் சித்ராதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ), அசோக் வரவேற்றார். பேராசிரியர் பாஸ்கர் நன்றி கூறினார்.

இதைத் தொடர்ந்து சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்தப்பேரணி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரியில் தொடங்கி ஆர்.ஆர் நகர் வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் உள்ளே சென்று மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரி வரை நடைபெற்றது. இப்பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட குற்ற பதிவேடு கூடம் துணை காவல் கண்காணிப்பாளர் திவ்யா, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ரோஸி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா , மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார், உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன், தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு