தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலையில் இன்று, 22ம் தேதி இலவச பயிற்சி

 

தஞ்சாவூர், அக்.8: தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் இன்று மற்றும் 22ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இதுகுறித்து தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால் நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்தும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் மேலக்கால் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து வருகிற 22ம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு 04362 – 264665 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம் என்று பயிற்சி மையத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்