தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வங்கிக்கடன் முகாம்

தஞ்சாவூர், ஜூலை 4: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் வங்கிக்கடன் முகாம் இன்று நடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அய்யனார் கோயில் திட்டப்பகுதி கூடநாணல் திட்டப்பகுதி மற்றும் மகாராஜசமுத்திரம் திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதன் பயனாளிகள் அரசுக்கு பங்களிப்புத்தொகை செலுத்தவேண்டும். பங்களிப்பு செலுத இயலாத பயனாளிகள் மாவட்ட வங்கிக்கடன் பெற வங்கிக்கடன் முகாம் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கலந்துக் கொள்ள வரும் பயனாளிகள் ஆதார்கார்டு, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கிக் கணக்கு புத்தகம் எடுத்து வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை