தஞ்சாவூர் அருங்காட்சியம் எதிரில் சேதமடைந்த நடைபாதை கம்பியை சீரமைக்க வேண்டும்

 

தஞ்சாவூர், செப். 18:தஞ்சாவூர் அருங்காட்சியம் எதிரில் சேதமடைந்த நடைபாதை கம்பியை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடைபாதை தஞ்சாவூர் பழைய கோர்ட்டு சாலையில் அருங்காட்சியகம், ஆயுதப்படை மைதானம், தாசில்தார் அலுவலகம், மற்றும் கடைகள் அதிகளவில் அமைந்துள்ளன. இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி பழைய கோர்ட்டு சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டது.

நடைபாதையின் ஓரங்களில் தடுப்புகம்பிகள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமின்றி நடந்து சென்று வந்தனர். தற்போது நடைபாதை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. நடைபாதையில் உள்ள தடுப்பு கம்பிகள், தளக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. நடைபாதையில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் கற்கள் கொட்டப்பட்டு இருக்கின்றன. இவற்றால் பொதுமக்கள் நடைபாதையில் சிரமத்துடன் நடந்து சென்று வருகின்றனர்.

மேலும், நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகம்பிகள் சேதமடைந்து இருக்கிறது. ஒருசில இடங்களில் தடுப்புகம்பிகளை மர்மநபர்கள் பெயர்த்து எடுத்து சென்று உள்ளனர். ஆங்காங்கே தடுப்பு கம்பிகள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் இருக்கிறது. நடைபாதை சேதமடைந்து இருப்பதால் அருங்காட்சியகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் கடைகளுக்கு வருபவர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நடைபாதையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்