தஞ்சாவூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது

 

தஞ்சாவூர், அக்.5: தஞ்சாவூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூா் அடுத்த யாகப்பாசாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாகவும், அங்கிருந்து சில பகுதிகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 126 கிலோ புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தஞ்சை யாகப்பா சாவடியை சேர்ந்த ரியாஸ்கான் (24), கீழவாசல் ஆரோக்கியநாதன் (50), அய்யம்பேட்டை ஜாபர் அலி (52), யாகப்பா சாவடி சுபேதாபேகம் (40), ஒரத்தநாடு செந்தில்குமார் (55), ரவி (56) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை