தஞ்சாவூரில் 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கிய 5 ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: தஞ்சாவூரில் 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி நாராயணன் என்பவருக்கு தஞ்சாவூர் மாவட்ட சிறப்பு விரைவு நீதிமன்றம் வழங்கிய 5 ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் தெருவில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து மிரட்டியும், துன்புறுத்தியும் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைகளின் உடலில் இருந்த காயங்களை அறிந்து விசாரித்ததில் நாராயணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர் தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாராயணன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் குற்றவாளியான நாராயணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் 9 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய 4 குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் தொந்தரவு செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. எனவே இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் குறிப்பிட்ட 5 ஆயுள் தண்டனையையும் உறுதி செய்கிறோம் என கூறி மனு தாரரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்….

Related posts

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி

மாஞ்சோலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி