தஞ்சாவூரில் 3,887 மின் இணைப்புகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

தஞ்சாவூர், டிச.3: தஞ்சாவூரில் 3,887 மின் இணைப்புகளில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் 11 இணைப்புகள் தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள தஞ்சை கோட்டம், தஞ்சை நகர் உபகோட்டம், மின்னகர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் தஞ்சை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் வட்ட அளவிலான கூட்டுக்குழு ஆய்வு நடந்தது. இதில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் என 80 அலுவலர்கள் கலந்து கொண்டு 3,887 மின் இணைப்புகள் ஆய்வு செய்ததில் 11 மின் இணைப்புகளில் தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை