தஞ்சாவூரில் மகளிர் சுயஉதவிகுழுக்களை சேர்ந்த 14,354 உறுப்பினர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

 

தஞ்சாவூர், செப்.10: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தரப்பில் அளித்த 350 மனுக்கள் பெறப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 350 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் தியாகராஜன் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் சங்கர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்