தஞ்சாவூரில் சர்வதேச ‘ஓப்பன் கராத்தே போட்டி’ வெற்றிபெற்றவர்களுக்கு முரசொலி எம்.பி., சான்று வழங்கல்

 

தஞ்சாவூர், ஆக். 6: தஞ்சாவூரில் சர்வதேச ‘ஓப்பன் கராத்தே போட்டி’யில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூரில் சர்வதேச அளவிலான ‘ஓபன் கராத்தே போட்டி’ தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும்;

கர்நாடகா , கேரளா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும்; தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் போட்டியில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி சான்றிதழ், பரிசுகோப்பை ஆகிவற்றை வழங்கி, பேசினார். தென்னிந்திய கராத்தே கழக தலைவர் அன்பரசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது