தஞ்சாவூரில் கல்விக் கடன் முகாமில் ரூ.6.35 கோடிக்கு ஆணை

 

தஞ்சாவூர், பிப்.16: தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் மாபெரும் கல்விக் கடன் முகாம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக் கடன் முகாமில் 10 வங்கிகள் கலந்து கொண்டன.

இ-சேவை மையம் மூலம் பயனாளிகள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தகுந்த ஏற்பாடுகள் இம்முகாமில் செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 134 மாணவ-மாணவிகளுக்கு ரூ.6.35 கோடி மதிப்பிலான கல்விக் கடன் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 150க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது விண்ணப்பங்களை கல்விக் கடன் வேண்டி இம்முகாமில் சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இம்முகாமில் எம்.பிக்கள், எஸ்.எஸ். பழநிமாணிக்கம், கல்யாணசுந்தரம், மாவட்ட வருவாய் உறுப்பினர் அலுவலர் தியாகராஜன், மேயர் சண்.இராமநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி