தச்சன்குறிச்சி ஊராட்சியில் நல்லமுத்தாயி குளத்தை சீரமைக்க வேண்டும்

 

கந்தர்வகோட்டை,செப்.10: தச்சன்குறிச்சி ஊராட்சியில் நல்லமுத்தாயி குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் தச்சன்குறிச்சி ஊராட்சியில் உள்ள சுமார் 4 ஏக்கர் பாராப்பளவு உள்ள நல்ல முத்தாயி குளத்தை சுற்றிலும் உள்ள கருவேல மரத்தை வெட்டி அகற்ற வேண்டும். குளத்தில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி ஆழப்படுத்த வேண்டும். மேலும் குளத்தில் உள்ள படி துறைகளை கட்டி சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் குளத்திற்கு நீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி மழை காலங்களில் குளம் நிரம்பினால் மக்கள் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கு பெரிதும் பயன்படும். இந்த குளத்தில் நீர் பெருகினால் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நீர்மட்ட உயரும். இதனால் அருகில் உள்ள நிலங்களில் நீர் பாய்ச்ச சுலபமாக இருக்கும். எனவே கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மக்கள் பயன் பெரும் வகையில் குளத்தை சீர் செய்ய முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்