தங்கம், வெள்ளி பதக்கம் வென்று வேலூர் மாணவர்கள் அசத்தல் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் படம் அதர்சில் உள்ளது

வேலூர், செப்.19: காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று வேலூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள்-2024 பிஜி நாட்டின் தலைநகரமான சுவாவில் கடந்த 16ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் மாவட்ட அரசு பளு தூக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் கிஷோர், மாதவன் மற்றும் மாணவி ஓவியா ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்றுமுன்தினம் நடந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யூத்) 61 கிலோ எடைப்பிரிவில் மாணவன் கிஷோர் கலந்து கொண்டு சினாச் பிரிவில் 110 கிலோ, கிளின்-ஜாக் பிரிவில் 132 கிலோ என்று 242 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தான். அதேபோன்று கிஷோர் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றான். காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த காட்பாடி காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவனான கிஷோர் மற்றும் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவன் மாதவன் ஜூனியர் பிரிவில் 67 கிலோ எடைப்பிரிவில் தங்கமும், சீனியர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியதைதொடர்ந்து பலர் வாழ்த்து, பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்