தங்கம் விலை 2 நாட்களில் சவரன் ரூ.360 குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. கடந்த 25ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,850க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,800க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.4,820க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.38,560க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.4,805க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்….

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400ஆக விற்பனை

ஜூலை-08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34