தங்கம் விலை இன்று அதிகரிப்பு.. சவரன் ரூ. 38 ஆயிரத்தை நெருங்கியது : நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை:தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த 2ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.36,192க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 3ம் தேதி ரூ.36,256, 4ம் தேதி ரூ.36,296, 5ம் தேதி ரூ.36,336, 7ம் தேதி ரூ.36,360, 8ம் தேதி ரூ.36,464, 9ம் தேதி ரூ.36,672, 10ம் தேதி ரூ.36,808, 11ம் தேதி ரூ.36,880க்கும் விற்க்கப்பட்டது. 12ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,715க்கும், பவுனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு பவுன் ரூ.37,720க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுன் ரூ.1,528 உயர்ந்தது. இந்த தொடர் விலை ஏற்றத்துக்கு ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றமே காரணம் என்று கூறப்பட்டது. 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் விற்பனையானது.ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,695க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.37,560க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இன்று காலை தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.43 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,738க்கும், பவுனுக்கு ரூ.344 அதிகரித்து ஒரு பவுன் ரூ.37,904க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த நகை விலை ஏற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தான் அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்….

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது

மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி