தங்கம் விலையில் மேலும் மாற்றம்; சவரனுக்கு ரூ88 உயர்ந்து ரூ33,720 ஆக விற்பனை

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய நிலையில் இன்று காலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, சவரன் ரூ.33,720க்கு விற்பனையானது. மத்திய அரசின் பட்ஜெட் கடந்த மாதம் 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீதம் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களில் பவுன் ரூ.1,360 அளவுக்கு குறைந்தது. அதன் பிறகு தங்கம் விலை சற்று ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,342க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.34,736க்கும் விற்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 3ம்தேதி சவரனுக்கு ரூ.376 குறைந்து ஒரு சவரன் ரூ.33,736க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் சவரன் 34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1104 அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நகைக் கடைகளில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகமானது. இந்நிலையில், தங்கம் விலை சற்று ஏற்றம் காண தொடங்கியுள்ளது. இன்று காலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.11 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,215 ஆகவும், ஒரு சவரன் ரூ.33,720 ஆகவும் விற்கப்பட்டது. தங்கம் விலை சரிவை சந்தித்த நிலையில் தற்போது உயரத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை