தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.36,000க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,500க்கும், ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது.முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,500க்கும், ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது….

Related posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை..!!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் சேவைக் கட்டணம் உயர்வு