தங்கம் சவரனுக்கு 120 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 120 குறைந்தது.தங்கம் விலை கடந்த மாதம் தீபாவளி நேரத்தில் கடுமையாக அதிகரித்தது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமான போக்கும் இருந்து வருகிறது. சில சமயத்தில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இதனால், நகை வாங்குவோர் இடையே தொடர்ந்து ஒரு ஒரு குழப்பமான சூழ்நிலை நீடித்து வருகிறது.அதாவது, எங்கே நகை வாங்கினால் மறுநாள் விலை குறைந்து விடுமோ? என்ற ஏக்கமும் இருந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4,530க்கும், சவரன் 36,240க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 15 குறைந்து ஒரு கிராம் 4,515க்கும், சவரனுக்கு 120 குறைந்து ஒரு சவரன் 36,120க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்துள்ளது நகை வாங்குவோரிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது

மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி