தங்கம் சவரனுக்கு ரூ.216 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.216 அதிகரித்தது. தங்கம் விலை 5ம் தேதி சவரன் ரூ.64, 6ம் தேதி சவரன் ரூ.176, 7ம் தேதி சவரன் ரூ.488 குறைந்தது. 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. 9ம் தேதி சவரன் ரூ.392, 10ம் தேதி சவரன் ரூ.224 என தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1,344 குறைந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் 35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்தால் மக்கள் நகை வாங்க அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், நகை கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,368க்கும், சவரனுக்கு ரூ.40 ஒரு சவரன் ரூ.34,944க்கும் விற்கப்பட்டது. நேற்று காலையும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,386க்கும், சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,088க்கும் விற்கப்பட்டது. மாலையில் மேலும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,395க்கும், சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,160க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது. …

Related posts

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சென்செக்ஸ் 80000, நிப்டி 24300 புள்ளி கடந்து சாதனை..!!

மும்பை பங்குச்சந்தையில் 80,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்..!!