தங்கச்சிமடத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரிக்கை

ராமாநாதபுரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்கக்கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மார்ச் 23-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் சிறையில் அடைத்தனர். இந்த 12 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்யாமல் தொடர்ந்து காவல்நீட்டிப்பு செய்து வருகின்றனர். இதனை கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேரை தாயகம் அனுப்பவும், கடந்த 2019-2022ம் ஆண்டு வரை சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை அரசின் வசம் உள்ள தமிழக விசைப்படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தங்கச்சிமடம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களின் முக்கிய கோரிக்கையாக, சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் திரும்ப அனுப்பட வேண்டும் மற்றும் விடுதலை செய்யப்பட்டும் இலங்கையில் உள்ள மீனவர்கள் தாயகம் அனுப்பவேண்டும் என்பதை வலியுறுத்தியே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.              …

Related posts

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்