தக்கலை அருகே மண் கடத்திய டெம்போ பறிமுதல் 2 பேர் மீது வழக்குப்பதிவு

குமாரபுரம், டிச. 14: தக்கலை அருகே மண் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது. தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் தலைமையில் போலீசார் குமாரகோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அரசு அனுமதியின்றி மண் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த டெம்போவை பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையம் ெகாண்டு வந்தனர். மேலும் டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்