தக்கலை அருகே குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு

குமாரபுரம்: குழித்துறை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் தக்கலை, அழகியமண்டபம் பகுதிகளுக்கு களியக்காவிளை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையோரம் பதிக்கப்பட்ட ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்த நிலையில் சுவாமியார்மடம் பகுதியில்  சாலையோரம் உள்ள ராட்சத குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து சுமார் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்தபடியே வெளியேறியது. இதனால் குடிநீர் வீணாக பாய்ந்து சென்றது. தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி