தகுதியான விவசாயிகளுக்கு ஆலோசனை குழு ஒப்புதல் பெற்று நலத்திட்டங்கள் குருந்தன்கோடு வட்டார கூட்டத்தில் தீர்மானம்

திங்கள்சந்தை, ஆக. 9: குருந்தன்கோடு வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் குருந்தன்கோடு வேளாண் அலுவலகத்தில் நேற்று நடந்தது. குருந்தன்கோடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை குழு தலைவர் காரங்காடு அருள்சுவாமி தலைமை வகித்தார். அட்மா குழு உறுப்பினர் புலி முகத்தை என் பிள்ளை வரவேற்றார். அட்மா உறுப்பினர்கள் ஜாண்பேட்ரிக், தெரசம்மாள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண், சிவ ஜெயச்சந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். அட்மா உறுப்பினர் ரெத்தினராஜ் நன்றி கூறினார்.

அட்மா திட்டத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான முதல் தவணை நிதி ஒதுக்கிட்டில் இருந்து ₹67 ஆயிரத்து 400 ஒதுக்கீடு செய்யப்பட்டு வட்டாரங்களுக்கு நிதியை பகிர்ந்தளிதல். விவசாயிகளுக்கு பல்வேறு கட்டமாக பயிற்சி வழங்குதல். வட்டார விவசாய ஆலோசனை குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தகுதியான விவசாயிகளை தேர்வு செய்து ஆலோசனை குழு ஒப்புதல் பெற்று நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதேபோன்று கோழிப்போர்விளை வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் தக்கலை பத்மநாபபுரத்தில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை குழு தலைவர் ஜஸ்டஸ் ராக் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் சர்மிளா, தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியதர்ஷினி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிக்கு, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஷானு, தனு கார்த்திக் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்