தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். முறைகேடுகளில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் குவாரி நிலம், தரிசு நிலங்களுக்கு பயிர்க்கடன் தந்து மோசடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் பயிர்க்கடன் தருவதற்கு பதில் ரூ.80ஆயிரம் வரை தந்துள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்கும் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளனர். ஒரு அளவு இல்லாமல் விருப்பப்படி கடன் வழங்கி அதிமுக ஆட்சியில் மோசடி செய்ததாக திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டியளித்துள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை