தகுதிசான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல், ஆக.9: நாமக்கல் மாவட்டத்தில், சாலை விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யும் படி வட்டார போக்குவரத்து அலுவர்களுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுலலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகேசன், மோட்டர் வாகன ஆய்வாளர் சக்திவேல், சரவணன் ஆகியோர் நேற்று மாலை நல்லிபாளையம், கீரம்பூர் டோல்கேட் உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது பல்வேறு விதிமுறைகளை மீறிய இயக்கப்பட்ட 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. தகுதிச் சான்று புதுப்பிக்காத ஒரு ஆம்புலன்ஸ் வாகனம், 4 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்களுக்கு இனக்ககட்டணமாக ₹35 ஆயிரம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து இணக்க கட்டணமாக ₹82000ம் வசூலிக்கப்பட்டது. இது போன்ற வாகன தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டாரபோக்குவரத்து அலுவலர் முருகேசன் தெரிவித்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை