தகட்டூர் சுப்பிரமணியன்காட்டில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

*இது உங்க ஏரியாவேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா தகட்டூர் சுப்பிரமணியன்காட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை இடித்துவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன்காடு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த தொட்டி 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சுப்ரமணியன்காடு, பண்டார தேவன்காடு, ராமகோவிந்தன்காடு உள்ளிட்ட பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிதண்ணீர் செல்கின்றது.இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ்ப் பகுதி மிகவும் பழதடைந்துள்ளது. மேலும் 4 பில்லர்களும் சிமெண்ட் காரைகள் உடைந்து எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது .இந்த பகுதியில் வீடுகள் உள்ளன. அடிக்கடி பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக உள்ளது. எனவே சேதமான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுவதற்கு முன்பாக இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டித்தர இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!