ட்வீட் கார்னர்… டெஸ்ட் சீருடையில் ‘யார்க்கர் கிங்’

இந்திய அணியுடன் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய சென்ற தமிழக வீரர் நடராஜன், யாருமே எதிர்பாராத வகையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகியதுடன் தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் விக்கெட் வேட்டை நடத்தி முத்திரை பதித்தார். உமேஷ் யாதவ் காயம் அடைந்ததால் தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளார். வெள்ளை சீருடையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடராஜன் டெஸ்ட் சவாலை எதிர்கொள்ளத் தயார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி இடையே போட்டி உள்ள நிலையில், நடராஜன் அறிமுகமாகும் வாய்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது….

Related posts

2வது டி.20 போட்டியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி 3-2 என தொடரை கைப்பற்றியது

செஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதில் தமிழகம் முதலிடம்; ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற டானியா சச்தேவ் பேட்டி