டேக் டைவர்சன்!… சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 10.11.2021 இரவு முதல் தற்பொது வரை பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் அதிக அளவு மழை நீர் தேங்கி  உள்ளது. இந்த சுரங்கபாதைகளில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.. தற்போது மழை நீர் தேக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் மண்டலம் வார்டு 5 ல் உள்ள  மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 46 ல் உள்ள வியாசர்பாடி நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாதை மற்றும் வார்டு 55 ல் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை, இராயபுரம் மண்டலம் வார்டு 60 ல் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 136 ல் உள்ள துரைசாமி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 140 ல் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதை,  தியாகராயநகர் வார்டு 136 ல் உள்ள மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் கனமழையின் காரணமாக நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பருவ மழையை முன்னிட்டு  பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 ஜ் 7  மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் 044-25619204,   044-25619206,  044-25619207, 044-25619208,  044-25303870 ஆகிய தொலைபேசி எண்களுக்கும்,   1913  என்ற உதவி எண் மற்றும் 9445477205, 9445025819,  9445025820, 9445025821 ஆகிய வாட்ஸ் ஆப் எண்ணிகளிலும்  தொடர்பு கொண்டு மழைநீர் தேக்கம், விழுந்த மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற புகார்கள் குறித்தும்,  தங்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் தெரிவிக்கலாம்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு