டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ரூ.13 லட்சம் வெளிநாட்டு பைக்குடன் எஸ்கேப் ஆன வாலிபர்: அண்ணாநகரில் பரபரப்பு

அண்ணாநகர்: அண்ணாநகரில் ஓட்டி பார்ப்பதாக கூறி வெளிநாட்டு பைக்குடன் தப்பிவிட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் 3வது பிரதான சாலையை சேர்ந்தவர் துலிப்(30). இவர் 13 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட வெளிநாட்டு பைக்கை இறக்குமதி செய்திருந்தார். பின்னர் அந்த பைக்கை விற்பனை செய்ய இணைய தளத்தில் தனது முகவரியுடன் விளம்பரம் செய்திருந்தார். இதை பார்த்ததும் ஏராளமானவர்கள், பைக் பற்றிய விவரங்கள் பற்றி கேட்டனர். சிலர் நேரில் வந்து பைக்கை ஓட்டிபார்த்து சென்றுள்ளனர். இதற்கான பைக்கின் சாவியை தனது வீட்டு காவலாளியிடம் கொடுத்து வைத்திருந்தார்.இந்தநிலையில், விளம்பரத்தை பார்த்து ஒருவர் நேற்று துலிப் வீட்டுக்கு வந்து காவலாளியிடம் பைக்கை ஓட்டி பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து காவலாளி, தன்னிடம் இருந்த சாவியை கொடுத்ததும் அந்த நபர் பைக்கை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுள்ளார். இதை காவலாளியும் கவனித்துகொண்டிருந்துள்ளார். திடீரென அந்த நபர் பைக்குடன் மாயமாகிவிட்டார். இதை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனடியாகஇதுபற்றி உரிமையாளர் துலிப்புக்கு தகவல் கொடுத்துள்ளார். பல இடங்களில் விசாரித்தும் பைக்குடன் சென்ற நபரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதுகுறித்து துலிப் கொடுத்த புகாரின்படி, அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து வெளிநாட்டு பைக்குடன் தப்பி ஓடிவிட்ட நபரை தேடி வருகின்றனர். நடிகர் வடிவேல் நடித்த ஒரு காமெடி சீனில் பைக்கை வாங்குவதுபோல் ஒருவர் வருவார். அப்போது வடிவேலு, பைக்கை ஓட்டி பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுவார். இதன்படி அந்த நபர் பைக்கை ஓட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார். இதுபோல் நிஜத்தில் தற்போது ஒரு காட்சி அரங்கேறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம்தேதி திருமங்கலத்தில் உள்ள ஷோரூம் உரிமையாளர் சவுந்தரபாண்டியன் என்பவரிடம் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜீப்பை ஓட்டி பார்ப்பதாக கூறி எடுத்து சென்ற சம்பவம் நடந்தது….

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்