டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பதில் ஊழியர் கையெழுத்து: ஆளுநர் அலுவலகம் கொதிப்பு

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பதிலாக, முதல்வர் அலுவலக ஊழியர் கையெழுத்து போட்டு இருந்ததால் 47 கோப்புகளை ஆளுநர் அலுலவகம் திருப்பி அனுப்பியுள்ளது. டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், பாஜ.வுக்கும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக கடும் மோதல் நடந்து வருகிறது. கெஜ்ரிவாலுக்கு ஆளுநரும் குடைச்சல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்காக முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் இருந்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பதிலாக முதல்வர் அலுவலகத்தின் ஊழியர் கையெழுத்திட்டு உள்ளார். இதனால், இந்த கோப்புகளை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் சக்சேனா கடிதம் எழுதி இருக்கிறார். அதில், கோப்புகளில் அலுவலக ஊழியர் கையெழுத்திட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி கண்டித்துள்ளார். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட கோப்புகளில் கல்வித்துறை, வக்பு போர்டு போன்றவையின் கோப்புகளும் அடங்கும். முதல்வர் அலுவலகம் தொடர்ந்து அவருடைய கையெழுத்து இல்லாமல் கோப்புகளை அனுப்புவதால், ஆளுநர் சக்சேனா கடும் அதிருப்தி அடைந்துள்ளார்….

Related posts

தேர்வு மையம் வாரியாக வெளியிடப்பட்ட நீட் முடிவுகள் குஜராத், ராஜஸ்தானில் மெகா மோசடி?

காற்று மாசுபாடு தடுப்பதில் ஒன்றிய பாஜ அரசு தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாக்.கில் 2021ம் ஆண்டு மாயமான இந்து சிறுமி: கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் போராட்டம்