டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்போம்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

பெங்களூரு: டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றியுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சிபிஐ என் வீட்டில் சோதனை செய்தனர். அதிகாரிகள் என் படுக்கையறைக்குள் நுழைந்தனர், ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவில், எனக்கு ‘நேர்மையான முதல்வர்’ என்ற சான்றிதழ் கிடைத்தது எங்களுடைய அரசு நேர்மையான அரசு. அந்த அரசை டெல்லியில் உருவாக்கினோம்.  தற்போது பஞ்சாபில் உருவாக்கியுள்ளோம். அதைபோல கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம். டெல்லியில் இந்த ஆண்டு 4 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வந்துள்ளனர். டெல்லியில் 2 கோடி பேருக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் முன்னதாக 8 மணி நேரம் மின்வெட்டு இருந்தது, ஆனால் இப்போது பூஜ்ஜிய கட்டணத்தில் மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!